img
About

Ulavan center of social service

img
img
ஆண்டு 2024 நிறைவேற்றிய திட்டம் - 01 :

உழவன் - சமூக சேவை மையத்தின் சீரிய முயற்சியின் காரணமாகவும்,கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நமது வாரப்பட்டி ஊராட்சி சந்திராபுரத்தில் உள்ள “அரசு உதவித் துவக்கப் பள்ளி ” யை மறுசீரமைப்பு செய்துள்ளோம். முறையே பள்ளியின் மேற்கூரை,தளம்,சுற்றுச்சுவர், பள்ளி கட்டிடம் ஆகியவற்றை CSR நிதி மூலம் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பான முறையில் சீரமைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆண்டு 2024 நிறைவேற்றிய திட்டம் - 03 :

Dr.A.P.J அப்துல்கலாம் பிறந்தநாள் சார்பாக மாணவர்களுக்கு இலக்கண புத்தகங்கள் வழங்கப்பட்டது

img
img
img
img
ஆண்டு 2025 - நிறைவேற்றிய திட்டம் - 07

உழவன் - சமூக சேவை மையத்தின் சீரிய முயற்சியின் காரணமாகவும், கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், தனியார் நிறுவனத்துடன் இணைந்து கந்தம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியை சிறப்பான முறையில் வண்ணம் தீட்டி சீரமைத்துள்ளோம். இப்பணியை பள்ளி மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கோடைகால விடுமுறையை பயன்படுத்தி செய்து முடித்துள்ளோம். முறையே CSR நிதி மூலம் சிறப்பான முறையில் சீரமைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆண்டு 2026 - நிறைவேற்றிய திட்டம் - 08

நமது உழவன் சமூக சேவை மையம் சார்பாக 08/01/2026 அன்று நமது வாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளின் சத்துணவு கூடங்களின் தேவைகள் குறித்து நேரில் சென்று கேட்டறியப்பட்டு, 09/01/2026 வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான சமையல் உபகரணங்கள், உணவு சேமிப்பு பாத்திரங்கள் மற்றும் நீர் தொட்டிகள் சமூக பொறுப்பு நிதி யின் மூலம் பள்ளி குழந்தைகளின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட பள்ளிகளுக்கு முறையே வழங்கப்பட்டது. 1. அரசு உயர்நிலைப்பள்ளி, சுல்தான்பேட்டை 2. அரசு ஆரம்பப்பள்ளி, சுல்தான்பேட்டை 3. அரசு ஆரம்பப்பள்ளி, வாரப்பட்டி 4. அரசு உதவி துவக்கப்பள்ளி, வா. சந்திராபுரம் 5. அரசு ஆரம்பப்பள்ளி, புளியமரத்துபாளையம் 6. அரசு ஆரம்பப்பள்ளி, சடையன்செட்டிபாளையம் 7. அரசு ஆரம்பப்பள்ளி, கந்தம்பாளையம்

img
img
img
img
ஆண்டு 2026 - நிறைவேற்றிய திட்டம் - 09

சுல்தான்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு 2026 பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியும், எதிர்வரும் ஆண்டில் பொதுத் தேர்வு எழுத தயாராக இருக்கும் மாணவர்களை உற்சாகமூட்டியும், அரசுப் பள்ளியில் 100% தேர்ச்சி என்பது பலருக்கு எட்டாக்கனியாக உள்ள காலகட்டத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக 100% தேர்ச்சியினை பெற காரணமாக இருந்த ஆசிரியர் பெருமக்களை கௌரவபடுத்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

img