Ulavan center of social service

ஆண்டு 2024 நிறைவேற்றிய திட்டம் - 02 :
2024 ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி, V. சந்திராபுரத்தில் ரோட்டரி சங்கம் வின்ட்சிட்டி மற்றும் உழவன் சமூக சேவை மையம் இணைந்து ஜமாப் மற்றும் வள்ளி கும்மி ஆட்ட கிராமிய கலைக்குழுவினரின் சேவையை பாராட்டி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து ஊர் பொதுமக்களும், ரோட்டரி சங்க உறுப்பினர்களும், உழவன் சமூக சேவை மைய தன்னார்வலர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆண்டு 2024 - நிறைவேற்றிய திட்டம் - 04
வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஜமாப் ஆட்ட பயிற்சி வகுப்பு - நமது கிராமிய கலையை ஊக்குவிக்கும் வகையில் வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் ஜமாப் ஆட்ட பயிற்சி வகுப்புகள் சுல்தான்பேட்டையில் நடைபெற்றது. இவ்வகுப்பில் குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் அரங்கேற்ற விழாவானது 30.11.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.



